எரிபொருளுக்காக அமெரிக்காவை நாடு இலங்கை
அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கொள்முதல்களுக்கான விலை மனுக்கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயை சேர்ப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
இதனை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே உறுதிப்படுத்தியுள்ளார்.
எண்ணெய் இறக்குமதி
எரிபொருளுக்காக அமெரிக்காவை நாடு இலங்கை தற்போது வளைகுடா பிராந்தியத்திலிருந்து இலங்கைக்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கூடுதலாக, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட கச்சா எண்ணெயை விலை மனுக்கோரல் செயல்பாட்டில் சேர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது.
விலைகளின் அடிப்படையில் இரண்டு வகைகளில் கீழ் எவ்வாறு இறக்குமதி செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என நிர்வாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



