பிள்ளையான் கும்பலை சுற்றி வளைக்கும் புலனாய்வாளர்கள்..!
பிள்ளையான் கும்பலின் கீழ்செயற்பட்ட ஆறு துப்பாக்கிதாரிகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தற்போதைக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
அவரது மாகாண நிர்வாகத்தின் கீழ் மாகாண சபை உறுப்பினராக செயற்பட்ட இனிய பாரதி என்றழைக்கப்படும் கந்தையா புஷ்பகுமார் என்பவரும் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆறு துப்பாக்கிதாரிகள்
இந்நிலையில் பிள்ளையான் மற்றும் இனியபாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் பிள்ளையான் கும்பலின் கீழ்செயற்பட்ட ஆறு துப்பாக்கிதாரிகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
குறித்த ஆறுபேரும் துப்பாக்கி கையாளுதல் தொடர்பில் மிகச்சிறந்த பயிற்சிகளைப் பெற்றுள்ளதுடன், கடந்த 2007 - 2009 வரையான காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் அவர்களுக்குத் தொடர்புற்றிருப்பதும் தெரிய வநதுள்ளது.
குறித்த நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கபபட்டுள்ள நிலையில் வெகுவிரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



