தேங்காய் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு வயதுக் குழந்தை
புத்தளம் வென்னப்புவ, பண்டிரிப்புவ பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை தேங்காய் ஒன்று தலையில் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று(16) இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் இறுதிச் சடங்குகள்
வென்னப்புவை பிரதேசத்தின் அருகே பண்டிரிப்புவ பகுதியில் வசித்த ஜீவன் குமார் சஸ்மின் எனும் இரண்டு வயதுக் குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது.
சிசிடிவி பதிவில் காணொளியாக்கப்பட்டுள்ள சம்பவத்தின்படி, குறித்த குழந்தை தனது வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து காயமுற்ற குழந்தை உடனடியாக மாரவில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எனினும் குழந்தையின் நிலைமை மோசமாக இருந்த காரணத்தினால் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குழந்தையின் இறுதிச் சடங்குகளை செய்யவும் பெற்றோரிடம் வசதியற்ற நிலையில், தேசிய மருத்துவமனை ஏற்பாட்டில் குழந்தையின் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



