சர்ச்சைக்குரிய விசா விவகாரம் : கோப் குழுவின் கூட்டத்துக்கு செல்லத் தவறிய அரச அதிகாரிகள்
இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டினருக்கு இணைய விசா வழங்கும் செயல்முறை தொடர்பான பிரச்சினைகளுக்கான கலந்துரையாடலின் போது பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பங்கேற்காமை குறித்து நாடாளுமன்ற பொது நிதிக்கான குழு (CoPF) கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இந்தக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதாக முன்னர் உறுதியளித்திருந்தனர்.
எனினும், நேற்றைய கூட்டத்துக்கு செல்லத்தவறியமையானது, குழுவுக்கு எதிராக மேற்கொண்ட அவமரியாதையாகவே கருதுவதாக குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ச டி சில்வா (Harsha de Silva) குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விவாதங்கள்
இந்தநிலையில் இணைய விசா விண்ணப்பங்களுக்கு GBS-IVS மற்றும் VFS Global ஆகிய நிறுவனங்களை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாக நியமிப்பது தொடர்பான மேலதிக விவாதங்களுக்காக, சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் திணைக்களத்தின் பிரதிநிதிகளை மீண்டும் ஒருமுறை வரவழைக்க முடிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்கள் சுரேன் ராகவன் (Suren Raghavan), சீதா அரம்பேபொல (Sita Arambepola,) மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam