இலங்கையின் புதிய சட்ட உருவாக்கலில் முக்கிய பங்கு வகிக்கவுள்ள அமெரிக்காவின் யோசனைகள்
இலங்கையில் (Sri Lanka)புதிய சட்டத்தை உருவாக்குவதில் அமெரிக்க (America) இராஜாங்க திணைக்களம் முக்கிய பங்கை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய சட்டம் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஒரே அமைப்பின் கீழ் பதிவு செய்ய வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த சட்டமூலத்தின் இறுதி வரைவு வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்கச் செயலாளர்
இந்நிலையில், சட்டமாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சட்டமா அதிபரின் பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துறை உத்தேச உள்ளூர் யோசனையில் இணைக்கப்படவேண்டிய சில பரிந்துரைகளை ஏற்கனவே அனுப்பியுள்ளது. இதில் ஒன்றுகூடும் ஒன்றிணைக்கும் சுதந்திரமும் அடங்குகிறது.
தற்போது, தேசிய அளவில் 1,786 பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாவட்ட அளவில் 1,636 நிறுவனங்களும், பிரதேச அளவில் 38,524 நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu), இந்த சட்டம் தொடர்பான சாத்தியமான தாக்கங்களை ஆராய்ந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |