பிரித்தானியாவில் இலங்கைத் தமிழருக்கு சொந்தமான உணவகத்தில் விசா மோசடி
பிரித்தானியாவில் இலங்கைத் தமிழருக்கு சொந்தமான உணவகத்தில் விசா மோசடி இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பர்மிங்காமின் பகுதியிலுள்ள உணவகத்தில் விசா இல்லாத நிலையில் இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் விசா மறுக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமான முறையில், குறித்த உணவகத்தில் தங்கியிருந்து பணியாற்றியமை தெரியவந்துள்ளது.
உணவகத்தில் விசா மோசடி
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பல்வேறு தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், உணவகத்தின் உரிமையாளர் அது குறித்து கவனம் செலுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தலா ஒவ்வொருக்கும் என்ற அடிப்படையில் 80000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.
எனினும் அதனை செலுத்தாமல், உணவக உரிமையாளர் இழுத்தடிப்பு செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களின் உணவகத்திற்கு தடை விதிக்க பிரித்தானிய உள்துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam