அரசாங்க வைத்தியசாலைகளில் படைவீரர்களுக்கு முன்னுரிமை
அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சேவையை பெற்றுக்கொள்ளும் போது படை வீரர்கள் மற்றும் அவர்களில் தங்கி வாழ்வோருக்கு முன்னுரிமை வழங்கும் முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் முயற்சியின் அடிப்படையில் சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரணவின் தலையீட்டின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
முன்னுரிமை
நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களில் தங்கி வாழ்வோர் இந்த திட்டத்தின் மூலம் கூடுதல் நன்மை பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்வதில் படை வீரர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கவனம் செலுத்தி அதற்கு உரிய தீர்வு திட்டம் ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில் விருசர சிறப்புரிமை அட்டை எனும் ஓர் அட்டை முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாதுகாப்பு படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களில் தங்கி வாழ்வோர் நன்மை அடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நலன்புரி திட்டம்
அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு இந்த அட்டையை பயன்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் அனைத்து அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் இந்த நலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த படை வீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த நலன்புரி திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri