இரு நாடுகளில் பரவி வரும் கோவிட் வைரஸ் இலங்கையிலும் அடையாளம்
பிரிட்டன், இந்தியாவைத் தவிர மேலும் 2 நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் பரவி வரும் பி.1.525 வைரஸானது பண்டாரகம மற்றும் கொழும்பு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட சிலரது இரத்த மாதிரிகளின் மரபணு வரிசை முறை ஊடாக அடையாளம் காண முடிந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கொழும்பு தனியார் மருத்துவமனையில் கோவிட் தொற்றுக்குள்ளான
நபரொருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தென்னாபிரிக்காவில் வியாபித்து
வரும் பி.1.351 என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும்
மருத்துவர் சந்திம ஜீவந்தர மேலும் குறிப்பிட்டார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
