விராட் கோஹ்லியின் உலக சாதனை!
கிரிக்கெட்டில் வரலாற்றில் 1100 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
ரி20 உலகக் கிண்ணப் போட்டி 2022 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று அடிலெய்டில் துவங்கியுள்ளது. இப்போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் துடுப்பாட்டம்
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா ஆகியோர் முதலில் துடுப்பெடுத்தாடினர்.
அதனைத் தொடர்ந்து கோஹ்லி, ரோஹித் ஷர்மா ஆகியோர் இணைந்து துடுப்பெடுத்தாடினர். இருவரும் நிதானமாகவும், அடித்து அசத்தினார்கள்.
இதனால், இந்திய அணி 7 ஓவர்களில் 46/1 என்ற நிலையில் இருந்தது. கோஹ்லி 20 (17), ரோஹித் ஷர்மா 21 (21) இருவரும் களத்தில் இருந்தார்கள்.
கோஹ்லியின் உலக சாதனை
கோஹ்லி இப்போட்டியில் 19 ஓட்டங்களை அடித்தபோது, ரி20 கிரிக்கெட்டில் வரலாற்றில் 1100 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற மெகா உலக சாதனையை படைத்தார்.
மேலும், குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஜெயவர்தினே (1016), 3ஆவது இடத்தில் கிறிஸ் கெய்ல் (965) ஆகியோர் உள்ளனர்.