டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானின் வெற்றியில் கடந்து வந்த பாதைகள்
டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
சிட்னியில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார்.
இந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இப் போட்டியில் பாபர் ஆஸம் தனது முதலாவது அரைச் சதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்தார்.
நியூஸிலாந்து
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணியிலும், பாகிஸ்தான் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கடைசிப் போட்டியில் ஆடியே அணிகளே இதிலும் களமிறங்கின.
முதல் ஓவரிலேயே ஷாஹீன் ஷா அஃப்ரிடியின் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரரான ஃபின் ஆலன் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து அந்த அணியைச் சோதனைக்கு உள்ளாக்கினார்.
அந்தத் தருணத்திலேயே பாகிஸ்தான் ரசிகர்களின் ஆராவாரம் சிட்னி மைதானம் முழுவதும் கேட்டது.
ஹாரிஸ் ராஃப் வீசிய பவர் பிளேயின் கடைசிப் பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே 'ரன் அவுட்' முறையில் ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ரன்கள் 21.
இந்த தடுமாற்றங்களுக்கு மத்தியிலும் நியூஸிலாந்து அணிக்கு ஆறுதலாக இருந்தது கேப்டன் வில்லியம்சனும் அவருடன் இணை சேர்ந்த மிட்சலும்தான்.
இவர்கள்தான் அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார்கள்.
17 ஆவது ஓவரில் கேன் வில்லியம்ஸன் 46 ரன்களை எடுத்திருந்தபோது சாஹீன் ஷா அப்ரிடி பந்தை ஸ்வீப் செய்ய முயன்று போல்டானார்.
20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. டேரில் மிட்சல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 ரன்களை எடுத்திருந்தார்.
இந்தப் போட்டியில் ஷாஹின் ஷா அப்ரிடியின் பந்துகள் விக்கெட்டுகளை நோக்கி அம்புகள் போலப் பாய்ந்து கொண்டிருந்தன.
நான்கு ஓவர்களை வீசிய அவர் 24 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூஸிலாந்தின் அடித்தளத்தை நொறுக்கியவர் அவரே.
152 ரன்கள் இலக்கை எட்டும் பணியே சலனமே இல்லாமல் செய்து முடித்தது பாகிஸ்தான் அணி. பாபரும் ரிஸ்வானும் சேர்ந்து 105 ரன்கள் என்ற பெருங் கோட்டையைக் கட்டிக் கொடுத்துவிட்டார்கள்.
ரிஸ்வான் 57 ரன்களும், பாபர் ஆஸம் 53 ரன்களும் எடுத்தார்கள். அதன் பிறகு வந்தவர்கள் படிப்படியாக ரன் சேகரிக்க, கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.
பாகிஸ்தானை எதிர்கொள்ளப் போவது யார்
இந்நிலையில், நாளைய தினம் இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி, எதிர்வரும் 13 ஆம் திகதி மெல்பர்னில் இடம்பெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும்.
இறுதிச் சமரில் பாகிஸ்தானை சந்திக்கப்போவது இந்தியாவா அல்லது இங்கிலாந்தா என்று நாளை தெரியவரும்.