4ஆவது முறையாக ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரராக விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வழங்கும் வருடாந்த விருது வழங்கல் விழாவில் விராட் கோலிக்கு (Virat Kohli) ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என்ற விருது 4ஆவது முறையாக வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் (America) இடம்பெற்ற ஐசிசியின் நிகழ்விலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை கோலிக்கு வழங்கி ஐசிசி வழங்கி கௌரவித்துள்ளது.
உலகக் கோப்பை
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், விராட் கோலி கடந்த ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,377 ஓட்டங்களை குவித்துள்ளார்.இதில் 6 சதம், 8 அரை சதம் என்பன உள்ளடங்கும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri