கொழும்பு - கண்டி பிரதான வீதியில் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டி மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் இன்று (3) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் ஜீப் வண்டி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிட்டம்புவ பொலிஸார் விசாரணை
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் பயணித்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, விபத்து தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 10 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
