இலங்கை ரசிகரை சந்தித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி மற்றும் தற்போதைய ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பு திறன் கொண்ட இலங்கை கிரிக்கெட் ரசிகரான கயான் சேனாநாயக்கவை சந்தித்தார்.
2022ம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண தொடர் தற்போது துபாயில் இடம்பெற்று வருகின்றது. இதன்படி நேற்றைய தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மிகவும் விறுவிறுப்பான போட்டி இடம்பெற்றிருந்தது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது. மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதி இந்திய அணி பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியைப் பெற்றது.
இந்த போட்டி இடம்பெற்று ஒரு நாள் கழித்து இன்றைய தினம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கயான் சேனாநாயக்கவை சந்தித்தனர். கயான் சேனாநாயக்க விராட் கோலியின் திருமண வரவேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri