சச்சினின் இளம் பருவ கிரிக்கெட் நண்பர் வினோத் கம்ப்லியின் கவலை தரும் காணொளி
கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் டெண்டுல்கர்(Sachin Tendulkar) போற்றப்படும் நிலையில் அவருடன் கிரிக்கெட்டுக்குள் நுழைந்த வினோத் கம்ப்லியினுடைய(Vinod Kambli ) உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
சச்சின் மற்றும் வினோத் ஆகியோரின் பயிற்றுவிப்பாளரான ராம்காந்த் அக்ரேக்கரின் நினைவு நிகழ்வுக்கு கம்ப்லி வந்திருந்தபோதே அவரின் உடல்நிலை குறித்த கரிசனைகள் எழுப்பப்பட்டன.
இது தொடர்பாக வெளியான காணொளியில், தமது இளம் பருவ நண்பரான சச்சின் டெண்டுல்கரின் கைகளை பற்றிக்கொண்டு, அவரின் கைகளை விட மறுக்கும் காணொளியில் அவர் பலவீனமாக காட்சியளிக்கிறார்.
This is painful.
— Kumar Manish (@kumarmanish9) December 3, 2024
Sachin Tendulkar meeting his “friend”& former cricketer Vinod Kambli during an event in Mumbai.
What a contrasting fortune despite starting from same line.
pic.twitter.com/3ADvCR2nPP
நோய் தாக்கம்
அவர் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார் என்றும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் அவரை மறுவாழ்வுக்கு உட்படுத்த 1983ஆம் ஆண்டின் உலகக்கிண்ண வெற்றி அணியினர் முன்வந்துள்ளனர்.
குறிப்பாக கபில்தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் இதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
கம்ப்லி குடிபோதைக்காக இதுவரை 13 தடவைகள் மறுவாழ்வு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிக்கைகளின்படி, கம்ப்லி, மனச்சோர்வு, இதயப் பிரச்சினைகள் மற்றும் தமனிகள் அடைப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |