நடுவீதியில் நடந்த கத்திக்குத்து.. பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
வீதியில் தனது மூத்த சகோதரனை கத்தியால் வெட்டிய சம்பவத்தில், படுகாயமடைந்த 48 வயது நபர் பதுளை பொது மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.
பதுளை பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ரோயல் சாலைக்கு அருகிலுள்ள நடைபாதையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரு சகோதர்களுக்கு இடையில் நடந்த மோதல் காரணமாக ஒருவர் மற்றைய நபரை நடைபாதையில் வைத்து கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
இதன்போது, அருகில் பணியில் இருந்த பொலிஸ் சார்ஜென்ட் நிலந்தா என்பவர், தனது உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும், தாக்குதல் நடத்தியவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கை பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில், இருவரில் முதலில் மூத்த சகோதரன் மற்றைய நபரால் தாக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் பழிவாங்கும் விதமாக அதே ஆயுதத்தை கொண்டு முதல் தாக்கப்பட்டவர் அவரை தாக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் இருவரும் காயமடைந்துள்ள நிலையில், பொலிஸ் கண்காணிப்பின் கீழ் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் பதுளை பகுதியில் உள்ள அமுனுபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri
