ராஜித , கெஹெலிய, தயாசிறிக்கு எதிராக விசாரணை! தமிழ் எம்.பி ஒருவரும் பட்டியலில்

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order
By Dharu May 23, 2025 12:04 AM GMT
Report

ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் தரப்பின் இராணுவ பிரிவை தேடும் புலனாய்வுத் துறை

பிள்ளையான் தரப்பின் இராணுவ பிரிவை தேடும் புலனாய்வுத் துறை

ஜனாதிபதி நிதியம்

2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து நிதி பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் அண்மையில் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

ராஜித , கெஹெலிய, தயாசிறிக்கு எதிராக விசாரணை! தமிழ் எம்.பி ஒருவரும் பட்டியலில் | Order Issued Court Rajitha Keheliya Dayasiri

இதற்கமைய குருநாகல் மாவட்ட உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த, ஆகியோர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக்கொண்டுள்ளதாக நளிந்த கூறியுள்ளார்.

மேலும், ஜகத் குமார 10 இலட்சம் ரூபா, குமாரசிறி 9 இலட்சம், ஜயலத் ஜயவர்தன 10 இலட்சம், நாமல் குணரத்ன 10 இலட்சம், தர்மசிறி பண்டா 10 இலட்சம், விதுர விக்கிரமநாயக்க 15 இலட்சம், விமலதீர திசாநாயக்க 30 இலட்சம், லகி ஜயவீர 16 இலட்சம், இராமலிங்கம் சந்திரசேகரன் 14 இலட்சம், ஜோன் அமரதுங்க 40 இலட்சம் என்ற அடிப்படையில் நிதி பெற்றுள்ளதாக அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன 100 இலட்சம் ரூபா, கெஹெலிய ரம்புக்வெல்ல 110 இலட்சம் ரூபா, டி. மு ஜயரத்ன 300 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுள்ளனர்.

இலங்கை தொடர்பில் ஆராய உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு

இலங்கை தொடர்பில் ஆராய உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு

முன்னாள் ஜனாதிபதிகள்

மேலும் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபகச, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த காலப்பகுதிகளிலே இந்த ஜனாதிபதி நிதியத்தின் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ராஜித , கெஹெலிய, தயாசிறிக்கு எதிராக விசாரணை! தமிழ் எம்.பி ஒருவரும் பட்டியலில் | Order Issued Court Rajitha Keheliya Dayasiri

இந்நிலையில் ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் நிதியைப் பாதுகாப்பதற்கான சட்டத்தரணிகள் அமைப்பினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதற்கமை இந்த விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தனர்.

இதன்போது ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அனுமதி வழங்கினார்.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US