தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்! பின்னணியில் முக்கிய அரசியல்வாதி
கொழும்பில் உள்ள தொடர்மாடி வீட்டு வளாகத்தில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் தற்போது பொலிஸ் காவலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
T56 ரக துப்பாக்கி
கொழும்பில் உள்ள தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் வசிக்கும் ஒருவர் உட்பட இரண்டு பெண்கள், சம்பவத்தில் முதலில் கைது செய்யப்பட்டனர்.
அங்கு, அந்தப் பெண்ணின் பையில் தங்கம் மற்றும் வெள்ளி வண்ணம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
முன்னதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் யாரோ ஒருவர் தங்கள் காரில், துப்பாக்கியை வைத்துள்ளதாகவும், அதை ஒரு பொம்மை என்று நினைத்து எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.
இதன் பின்னர் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 72 மணி நேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
48 மணி நேரம் தடுப்பு காவல்
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதி, தனது வீட்டில் வேலை செய்த சமையல்காரர் மூலம் இந்த துப்பாக்கியை தனக்கு வழங்கியதாக பிரதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சம்பவத்தில் தொடர்புடைய சமையல்காரரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவரை 48 மணி நேரம் தடுப்பு காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த துப்பாக்கியை அவருக்கு வழங்கிய அனுராதபுர மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியைக் கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்படும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
