உலகையே குழப்பிய அந்த ஒற்றை பென்குயின்! வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புகைப்படம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்குயின் ஒன்றுடன் கிரீன்லாந்து நோக்கி நடந்து செல்லும் விதமாக வெளியாகியுள்ள புகைப்படமானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
வெள்ளை மாளிகை ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவியுடன் உருவாக்கிய புகைப்படமே இவ்வாறு பேசுபொருளாகியுள்ளது. அதில் ட்ரம்ப்,தொலைவில், கிரீன்லாந்து நாட்டு கொடியும் உள்ளது.
ட்ரம்பின் புகைபடம்
பென்குயின் ஒன்றுடன் கிரீன்லாந்து நோக்கி நடந்து செல்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு, பென்குயினை தழுவுங்கள் என தலைப்பும் வைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க கொடியுடன் பென்குயின் செல்வது போலவும், அதனை ட்ரம்ப் அழைத்து செல்வது போன்றும் படம் உள்ளது.
இதனால், கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் பிரதேசம் பற்றிய அவருடைய விருப்பம் குறையாமல் உள்ளது வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.
சமீபத்தில் பென்குயின் ஒன்று தன்னுடைய கூட்டத்தில் இருந்து விலகி, தனியாக நடந்து செல்வது தொடர்பான காணொளியொன்று இணையத்தில் பரவலானது.
பென்குயின்கள் கூட்டம்
அதில் பென்குயின்கள் கூட்டம் ஓரிடம் நோக்கி நகர்ந்து செல்லும்போது, ஒரேயொரு பென்குயின் மட்டும் வேறு திசையை நோக்கி பயணம் செய்கின்றது.
உணவோ அல்லது வேறு பென்குயின்களோ இல்லாத மலை பகுதியை நோக்கி அது நடந்து செல்லும் காட்சி, ஜெர்மனி நாட்டு ஆவண பட தயாரிப்பாளரான வெர்னர் ஹெர்ஜாக் என்பவரால் 2007-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆவணத்தில் காட்டப்பட்டு இருக்கும்.

அதில், பிற பென்குயின்கள் எல்லாம் உணவு மற்றும் வாழ்விற்காக கடல் அருகே இருக்கும்போது, இந்த ஒரு பென்குயின் உணவு, கடலே இல்லாத, பனிக்கட்டி, பனி மற்றும் மலைகள் இருக்கும் பகுதியை நோக்கி செல்கிறது.
அதற்கு பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். நமக்கு தெரியாத விசயம் அதற்கு தெரியும் என்றும், அது ஒரு நோக்கத்துடன் செல்கிறது என்றும் மனஅழுத்தம், தேவையற்ற சிந்தனை கொண்ட இந்த உலகின் சிக்கல்களில் இருந்து விடுவித்து, மெல்ல நடந்து போகிறது என சிலரும் தெரிவித்து உள்ளனர்.
அரிய நிகழ்வு
அது வாழ்வில் தோற்று போன உணர்வால், எதிர்பார்ப்புகளில் இருந்து விலகி செல்கிறது, அமைதியான எதிர்ப்பு என்றும் சிலர் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.
This penguin video is going viral all over social media.
— Mat (@MatDefies) January 23, 2026
Most people watch it and say he went to the mountains to die, but I think it was to live.
He lived, while the rest survived.
There's a lesson in that. pic.twitter.com/Wkq4M7sup2
இது அரிய நிகழ்வு என்றபோதும் விஞ்ஞானிகள் கூறும்போது, உடல்நல பாதிப்பு, இடையூறு ஏற்படுத்துதல் ஆகியவற்றால், திசையை அறியும் திறனை அது இழந்து விடும். சில பென்குயின்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் இதுபோன்று சுற்றி திரியும் என்றும் கூறுகின்றனர்.
இந்தநிலையில் இந்த காணொளி மற்றும் புகைபடங்களை வைத்து பலரும் பல புகைபடங்களை உருவாக்கிவரும் நிலையில் ட்ரம்ப் நிர்வாகமும் இவ்வாறு செய்துள்ளமையானது பேசுபொருளாகியுள்ளது.