இராணுவ முகாமில் பரவும் காய்ச்சல் - தனிமைப்படுத்தப்பட்ட இராணுவத்தினர்
புதிய இணைப்பு
மன்னார் (Mannar) பெரியமடு பகுதியில் இராணுவ பயிற்சி முகாமொன்றைச் சேர்ந்த 25 இராணுவ வீரர்கள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்களுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இராணுவ வீரர்கள் 25 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் அங்கொடை தேசிய தொற்று நோய்தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும், தற்போது காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினருக்கு ஒரு வகையான காய்ச்சல் பரவுவதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முகாமிற்குள்ளேயே இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
முகாமில் உள்ள சுமார் 20 இராணுவ வீரர்கள் ஒருவித காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நோய்த் தொற்று
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் குழுவொன்றை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகாமில் உள்ள மேலும் 500 இராணுவத்தினர் முகாமிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறை
காய்ச்சல் பரவுவதற்கான காரணத்தை துல்லியமாக கண்டறிய ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சுமார் 4 நாட்களாக காய்ச்சல் பரவி வருவதாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக தகவல் - ஆஷிக்

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
