யாழில் மதுபானசாலைக்குள் நுழைந்து வன்முறைக் கும்பல் தாக்குதல்!
யாழ்ப்பாணத்திலுள்ள மதுபானசாலையொன்றில் நுழைந்து வன்முறைக் கும்பலொன்று தாக்குதல் நடாத்தியமை தொடர்பான அதிர்ச்சி சிசிரிவி காணொளிகள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவம், கடந்த 31.12.2024 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மதுபானசாலைக்குள் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு வாள்களுடன் வன்முறைக் கும்பலொன்று நுழைகின்றமை சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
மதுபானசாலை
இதன் போது குறித்த மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது சந்தேகநபர்கள் சிலர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சிசிரிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan