சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்ட தகவல்! (VIDEO)
கடந்த ஆண்டு சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் 3,373 முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவற்றில் 598 முறைப்பாடுகள், 5 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவை என்றும், அவர்களில் 252 பேர் சிறுமிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைக்கு உள்ளான சிறுவர்களில், 1,342 பேர் தமது தந்தையாலும், 718 பேர் தாயாலும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால், சிறுவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான 98 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில், சிறுவர் வன்முறைகள் தொடர்பில் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 16,395 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் சிறுவர் வன்முறைகள் தொடர்பான 19,768 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
