வன்முறைகளை தூண்டவில்லை:சம்பவங்கள் பின்னரே அறிந்தேன்
காலிமுகத் திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் கடந்த 9 ஆம் திகதி கலவரமான சம்பவங்கள் நடந்ததை தான் அன்றைய தினம் மாலை நேரத்திலேயே அறிந்துக்கொண்டதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அப்படியான சம்பவங்கள் நடக்க போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்ததால், அவற்றை தடுக்க நடவடிக்கை எடுத்திருப்பேன் எனவும் வன்முறை சம்பவங்கள் நடக்கும் என அறிந்திருந்தால், கட்சியினரை அலரி மாளிகைக்குள் அனுமதித்திருக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக தான் தூண்டுதல் எதனை மேற்கொள்ளவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கும் போதே முன்னாள் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சுகவீனமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக கொழும்பில் உள்ள விசேட இடமொன்றில், அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துக்கொண்டனர்.

மகிந்த ராஜபக்சவிடம் மீண்டும் வாக்குமூலத்தை பெற வேண்டுமா என்பது சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி Cineulagam
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri