காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம்! பெருந்தொகையை இழந்துள்ள போக்குவரத்து சபை
காலிமுகத்திடல் அறவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக போக்குவரத்துச் சபைக்கு ஐந்து கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒன்பதாம் திகதி காலிமுகத்திடல் அருகே கோட்டா கோ கம மற்றும் அலரி மாளிகை அருகே மைனா கோ கம அறவழிப் போராட்டக்காரர்கள் மீது ஆளுங்கட்சியின் குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
இதனையடுத்து ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் திருப்பித் தாக்கியதில் ஏராளமான சொத்துக்களும், பேருந்துகளும் சேதமாக்கப்பட்டிருந்தன.

காலிமுகத்திடல் அறவழிப்போராட்டத்தின் எதிரொலி
குறித்த தாக்குதல் சம்பவத்துக்காக ஆளுங்கட்சியின் குண்டர்களை ஏற்றிச் செல்ல இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் வாடகை இன்றி பயன்படுத்தப்பட்டதாகவும், பொதுமக்களின் தாக்குதல் காரணமாக அவை சேதமடைந்துள்ளதன் காரணமாக போக்குவரத்துச் சபைக்கு ஐந்து கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திரக் கட்சி சார்பான தொழிற்சங்கத்தின் தலைவர் பந்துல ரத்நாயக்க என்பவரே இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது போக்குவரத்துச் சபை உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் முறையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam