புத்தளத்தில் கலவரமாக மாறிய போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம்(Video)
புத்தளம் - கரம்பை உலுக்காப்பள்ளம் பகுதியில் போதை வியாபாரத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.
கிராமத்தில் அதிகரித்து வரும் போதை வியாபாரத்தை நிறுத்துமாரு கோரி நேற்று(13.04.2023) கிராம மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு
இதன்போது போதைப் பொருளை விற்பனை செய்யவேண்டாமென்று தெரிவித்த இளைஞர்கள் மீது போதை
வியாபாரிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி
இளைஞர்களும் போதை வியாபாரிகளைத் தாக்கியுள்ளனர்.
இதனால் போதை வியாபாரிகளுக்கும் அப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்று போதை வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த நுரைச்சோலைப் பொலிஸ் பொறுப்பதிகாரி இரண்டு கிழமைகளில் போதை வியாபாரத்தை அவ்விடத்திலிருந்து நிறுத்தித் தருவதாக கிராம மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.



