நீதிமன்றத்தின் திடீர் முடிவு: மோசமடையும் ரணிலில் உடல்நிலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்றையதினம்(26) பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.
அரசநிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழு, அவருக்கு பிணை பெறுவதற்காக நீதிமன்றத்தில் பல கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இதய திசு இறப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது உயிருக்கு கடுமையான ஆபத்து இருப்பதாகவும் இதனை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது, குற்றப் புலனாய்வுத் துறை சார்பில் முன்னிலையான மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் வழங்கிய அறிவுறுத்தலானது ரணிலுக்கு பிணை வழங்கக் கூடிய விசேட சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்ற வாதத்தை ஏற்படுத்தியது.
இதனை அவதானித்த நீதிபதி அனுஜ பிரேமரத்னவின் சமர்ப்பணத்தின் படி ரணில் விக்ரமசிங்கவின் தந்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அவரை பிணையில் செல்ல அனுமதிக்கலாம் என்ற உத்தரவை முன்வைத்தார்.
இந்த விடயம் தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் “செய்திகளுக்கு அப்பால் ”நிகழ்ச்சி.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



