பிரச்சினைகளை என்னிடம் கூறுங்கள்: முகநூலில் எனக்கு சேறு பூசி ஒன்றும் நடக்காது - பிரதேசசபை தவிசாளர் வினோராஜ்
பிரச்சினைகளை என்னிடம் கூறுங்கள், முகநூலில் எனக்கு சேறு பூசி ஒன்றும் நடக்காது, என்னுடைய மக்களுக்கான பணி தொடரும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு உட்பட்ட களுதாவளை பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் களுதாவளை பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நூலகத்தின் குறைபாடுகள்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரச நிதியை எவ்வாறு கையாள வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். களுதாவளை பொது நூலகத்தின் குறைபாடுகளை நாங்கள் பெற்றுள்ளோம். பிரச்சினைகள் பேசி தீர்க்கப்பட வேண்டும் முகப்புத்தகங்களிலும் வட்ஸ்அப் குழுக்களிலும் தவறாக எழுதுவதனால் ஒன்றும் செய்ய முடியாது. எமது பிரதேச சபை என்றும் பிரதேச மக்களுக்கு சேவை செய்து வருகின்றது.
இலங்கையிலே அதிகூடியமான வீதி மின் விளக்குகளை நாங்கள் பொருத்தியிருப்போம் என நாம் நம்புகின்றோம். கடந்த 12.02.2025 அன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியதற்கு முன்பு பிரதான வீதியில் 150இற்கு உட்பட்ட மின்விளக்குகள் தான் இருந்தன. இப்போது அதனைவிடவும், அதிகளவு மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அனத்தும் இரவில் ஒளிர்கின்றன.
மக்களின் கோரிக்கை
இவை அனைத்தும் பிரதேச சபையின் பெறப்பட்ட நிதியில் பெறப்பட்டவை அல்ல. எனது தனிப்பட்ட முயற்சியினால் தனவந்தர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியை கொண்டு இந்த மின்விளக்குகளை நாம் பொருத்தி இருக்கின்றேன். மக்கள் எமக்குத் தரும் கோரிக்கைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். கட்சி பேதங்களை மறந்து நாம் வேலை செய்ய வேண்டும்.
எந்தவித சமூக வலைத்தளங்களிலும் வட்ஸ்அப் குழுக்களிலும் விமர்சனங்கள் வந்தாலும் நாங்கள் மக்களுக்கு சேவை செய்து கொண்டே இருப்போம் என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam