சட்டவிரோத மதுபான வியாபாரிகளின் வீட்டு படலைகளில் பதாதைகளை ஒட்டிய கிராம மக்கள்
முல்லைத்தீவு(Mullaitivu) புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மதுபான விற்பனையினை கட்டுப்படுத்த கோரி மாணிக்கபுரம், இளங்கோபுரம், வள்ளவர்புரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் மாணிக்கபுரம் கிராம அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
குறித்த போராட்டம் இன்று(6) காலை 10.00 மணியளவில் முன்னெடுத்துள்ளார்கள்.
கவனயீர்ப்பு போராட்டம்
மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம்,உழைத்து வாழப்பழகு, ஊரை அழித்து வாழாதே, போதைப்பொருளை ஒழிப்போம் விசமிகளை அழிப்போம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை கையில் தாங்கியவாறு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
கிராமத்தில் இனம்காணப்பட்ட சட்டவிரோத கசிப்பு வியாபாரிகளின் வீடுகளுக்கு முன்னால் சென்று அவர்களுக்கு எச்சரிக்கையாக இன்றுடன் கசிப்பு விற்பனையினை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வீட்டு படலைகளில் பதாதைகளையும் ஒட்டியுள்ளார்கள்.
மக்களின் இந்த கோரிக்கைகள் கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளருக்கும்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் எழுத்து மூல அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





