தென்னிலங்கையில் மரண சடங்கினால் தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்
தென்னிலங்கையில் நடைபெற்ற மரண சடங்கிற்கு சென்ற 54 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயாகல, ஹொரகஸ்கெலே கிராம சேவகர் பிரிவில் மரண வீட்டிற்கு சென்ற 63 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் 54 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட கிராம சேவர் பிரிவினை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கொவிட் தடுப்பு செயலணி, சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்றாளர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மரண வீட்டிற்கு சென்று கொரோனா தொற்றாத ஏனைய 9 பேரும் கொவிட் தடுப்பூசி செலுத்தியதாக தெரியவந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
