5000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு (Photos)
1250 சனச சங்கங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக 5,000 கிராமங்களை அவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (28.11.2023) நடைபெற்ற 2023 சனச தேசிய மாநாட்டிலேயே இந்த திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கலாநிதி. பீ.ஏ.கிரிவந்ததெனியவினால் இந்த மூன்று வருடத் திட்டம் ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
25 மாவட்டங்களையும் உள்ளடக்கி 5,000 சனச தலைவர்களுக்கு வேலைத்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ் 5,000 கிராமங்களில் 10,000 வேலைத்திட்டங்களை ஆரம்பித்து அதனூடாக நேரடி மற்றும் மறைமுகமான 50,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனூடாக 300,000 குடும்பங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது ஜனாதிபதிக்கு சிறப்பு நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
சனச ஸ்தாபகர் கலாநிதி. பீ.ஏ.கிரிவந்ததெனியவின் "செலவை குறைப்போம் - வரவை அதிகரிப்போம்" என்ற எண்ணக்கருவுக்கமைவாகவே இந்த திட்டமிடல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






