பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்
அரசாங்க பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளைத் தவிர்த்து, தரம் 2 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கைகளை இரத்து செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு, ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளுக்குள் பராமரிப்பது அவசியமாகும்.
இதனால் நாட்டில் உள்ள அனைத்து பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில், பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளைத் தவிர்த்து, இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் வாய்ப்பை வழங்குவதற்கான முறையான வழிமுறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமானது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதிய சுற்றறிக்கை
இந்த விடயங்களை கருத்தில் கொண்டு, பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் தற்போது படிக்கும் பாடசாலையில் இருந்து வேறொரு பாடசாலையில் உண்மையிலேயே சேர்க்கப்பட வேண்டிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அதற்கு ஏற்ற வகையில், பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை வழங்க புதிய சுற்றறிக்கை வழிமுறைகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.



