அனுரவின் ஆட்சியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்: விஜித ஹேரத் உறுதி
அனுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமைச்சரவை எண்ணிக்கை 25 ஆக வரையறுக்கப்படும் எனவும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்கச் சபையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை மாத்திரமே தற்போது தெரிவு செய்துள்ளோம்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பிரதமர் யார், வெளிவிவகார அமைச்சர் யார், அமைச்சரவைக்கு நியமிக்கப்படும் நபர்கள் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

எனினும், அமைச்சரவையின் எண்ணிக்கை 25 ஆகவும், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆகவும் காணப்படும்.
அமைச்சருக்கு ஆலோசனை வழங்கச் சபையொன்று நிறுவப்படும். அதில் துறைசார் நிபுணர்கள் இருப்பார்கள்.
அவர்களுக்குச் சம்பளம், சலுகைகள் வழங்கப்படமாட்டாது என்பதுடன் அவர்கள் தன்னார்வ அடிப்படையில் சேவையாற்றுவார்கள்” என தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan