புதிய கல்விச் சீர்திருத்தம்:அமைச்சர் விஜித ஹேரத்தின் பரபரப்பான அறிவிப்பு
இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளை சில குழுக்கள் -அரசியல் கட்சிகள் அரசியல் கோணங்களில் கருத்துக்களை முன்வைத்து, இது பிரதமரின் தனிப்பட்ட சிந்தனைகளை கொண்டுள்ளதாக முன்னெடுக்கும் பிரசாரங்களை அரசாங்கம் என்ற வகையில் நாம் கண்டிக்கிறோம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (04.01.2026) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பிரதமருக்கு எதிரான செயற்பாடுகள்
இதை கொண்டு பிரதமரை கேலிக்கும் அவமானப்படுத்தும் கருத்துக்களை நாங்கள் வன்மையாக கண்டிகிறோம். புதிய கல்விச் சீர்திருத்த அரசாங்கத்தின் கூட்டு முயற்சியாகும்.
அத்தோடு அரசாங்கத்தின் பொறுப்பாகும்.நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்தை நோக்காக கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கை ரீதியிலான திட்டமாகும்.
பிரதமரின் தனிப்பட்ட எவ்வித அழுத்தங்களும் இங்கில்லை.அது அரசின் கூட்டான பொறுப்பாகும். தேசிய கல்வி ஆணைக்குழுவின் கொள்கை மூலாதாரங்களை கொண்டு தேசிய கல்வி நிறுவனத்தினாலே கல்வி சீர்திருத்தங்கள் இயற்றப்பட்டு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சியனால் முன்னெடுக்கப்படுகின்றன.

தரம் ஆறாம் பாடத்திட்டத்தில் ஏற்பட்ட பிழை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதன் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அது தொடர்பில் அவசரமாக நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் நினைப்பது போல் எவ்வித தவறான செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என உறுதியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.