மீண்டும் ஒன்றாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினராக விஜய் தணிகாசலம்
கனடாவின், ஒன்றாரியோ மாகாண சட்டமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் மற்றும் ஸ்காபரோ மக்களின் அமோக ஆதரவுடன் விஜய் தணிகாசலம் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்காபரோ - றூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்றளுமன்ற உறுப்பினராக விஜய் தணிகாசலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் “முதல்வர் டக் ஃபோர்டின் தலைமையின் கீழ், அவர் நியாயமற்ற கட்டணங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒன்றாரியோவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மக்களின் நம்பிக்கை
மேலும் விஜய் தணிகாசலம் அவர்கள் கூறுகையில்,
" ஸ்காபரோ - றூஜ் பார்க் மக்களின் நம்பிக்கைக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
நான் தொடர்ந்து அனைத்து மக்களின் நலனுக்காக இன்னும் கடினமாக போராடுவேன்,” என்று உறுதியளித்தார்.
இந்த வலுவான ஆணையுடன், மேலும் ஒன்றாரியோவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக தாங்கள் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்பின் தலைமை
மார்ச் 4, 2025 அன்று, அமெரிக்கா, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமையிலான நிர்வாகம், கனடிய இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்தது.
இது எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலையை காரணமாகக் கூறினாலும், ஒன்றாரியோ பொருளாதாரத்தில் 500,000 வேலைகளை ஆபத்துக்கு உருவாகியுள்ளது.
இதற்கு பதிலளிக்க கனடா, அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி கட்டணங்களை அறிவித்து.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam
