USAID ஊழியர் பணிநீக்கம் தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில்(USAID) பணிபுரியும் ஏராளமான ஊழியர்களை ட்ரம்ப் நிர்வாகம் பணிநீக்கம் செய்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு நீதிமன்றில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மாவட்ட நீதிபதியாக செயற்படும் கார்ல் நிக்கோல்ஸினால் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் USAIDஐ அகற்றும் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட விரும்பும் உதவித் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் முயற்சிகளுக்கு எதிராக நீதிபதியின் சமீபத்திய தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
தற்காலிக தடை
இன்று இடம்பெற்ற விசாரணையின் போது, USAID-ஆல் பணிநீக்கம் செய்யப்பட்ட தனிப்பட்ட சேவை ஒப்பந்தக்காரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம், தற்காலிக தடை உத்தரவு இல்லாமல் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் அதன் உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நிரூபிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கு ஒரு ஒப்பந்த தகராறு அல்ல என்றும், மாறாக ஒப்பந்தக்காரர்களை பணிநீக்கம் செய்யும் நிர்வாகத்தின் அதிகாரத்தை சவால் செய்யும் ஒரு பரந்த அரசியலமைப்பு வழக்கு என்ற தொழிற்சங்கத்தின் வாதத்தை நீதிபதி நிராகரித்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் 1,000 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட சேவை ஒப்பந்தக்காரர்கள் USAID இல் இணைந்துள்ளனர்,
மேலும் ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே அமெரிக்கா, மால்டோவா மற்றும் தாய்லாந்து போன்ற நடுத்தர மற்றும் உயர் வருமான நாடுகளில் பணிபுரியும் கிட்டத்தட்ட 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam

புடினிடமிருந்து ஐரோப்பாவை காப்பாற்ற பிரான்ஸ் நாட்டு அணு ஆயுதங்கள்: மேக்ரான் அதிரடி அறிவிப்பு News Lankasri
