வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி பூஜையும் ஏடு தொடக்குதலும்
நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான இன்று விஜயதசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் விஜயதசமி பூஜையும், ஏடுதொடக்குதலும் சிறப்பாக இடம்பெற்றது.
கல்வி, செல்வம், வீரம் வேண்டி சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூன்று தேவியருக்கும் நவராத்திரி பூஜை இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் நவராத்திரி பூஜையின் இறுதி நாளான இன்று விஜயதசமி மற்றும் ஏடு தொடக்குதல் என்பன இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக ஆலங்களில் இன்று (15) காலை தொடக்கம் பிற்பகல் வரையிலான காலப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பெருமளவான மக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கினர்.
அந்த வகையில் வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று ஏடு தொடக்கி வைக்கப்பட்டது.


கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri