மாநாட்டில் விஜய் மனைவியான ஈழத்தமிழ் பெண்ணாலும் சாதிக்க முடியாமல் போய்விட்டதா..!
தமிழகத்தில் எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடந்து முடிந்திருக்கின்றது.
இந்நிலையில் மாநாட்டிற்கு முன்னர் பல தர்க்க ரீதியான கருத்தியல்கள் முன்வைக்கப்பட்டாலும் மாநாடு நடந்து முடிந்த பின்னர் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து எவ்வாறு பேசப்பட்டிக்கின்றது என்ற கருத்துக்கள்தான் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் குறித்து பேசாத கட்சி மாநாடுகள் இல்லை என்றே கூறலாம். ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது.
விஜய்யின் மாநாட்டு உரையில் ஈழத்தமிழர்கள் குறித்து எவ்வித கருத்துக்களும் வெளியிடவில்லை.
இது இவ்வாறிருக்க அவரது தந்தையான சந்திரசேகருடைய நிலைப்பாடுகளின் விளைவு விஜயிடம் இருக்கலாம் அல்லது அவர் திருமணம் செய்து கொண்ட ஈழத்தமிழ்ப் பெண்ணினால் அவர் ஈழத்தமிழர்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய்யின் மாநாட்டு உரை ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




