தமிழக அமைச்சர் தென்னரசுடன் இலங்கை பிரதியமைச்சர் பிரதீப் சந்திப்பு
தமிழ் நாட்டின் நிதி மற்றும் சுற்றுச் சூழல் கால நிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழகம் சென்றுள்ள இலங்கை பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (21) சென்னையில் நடைபெறறுள்ளது.
மலையக மாணவர்களுக்கான
இதன் போது இலங்கை தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக மலையக மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பு பற்றி பிரதானமாகக் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் கலை, இலக்கிய ,சமூக,பொருளாதார விடயங்கள் பற்றியும் அமைச்சருடன் காத்திரமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது பிரதியமைச்சர் பிரதீப்புடன் சமூக ஆர்வலர் விக்ரமசிங்கவும் இணைந்திருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri