பெண்களிடமிருந்து தவறான புகைப்படங்களை பெற்றவருக்கு பிணை
திரைப்பட வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, விருது பெற்ற இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்கவைப் போல ஆள்மாறாட்டம் செய்து பெண்களிடமிருந்து தவறான புகைப்படங்களைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 26 வயது சந்தேக நபருக்கு கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
பொல்கஹவெலவைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், நாடு முழுவதும் 20 முதல் 35 வயதுடைய பெண்களைத் தொடர்பு கொள்ள இயக்குநரின் பெயர் மற்றும் படத்தைப் பயன்படுத்தி போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய குற்றப் பிரிவில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, நீதிமன்றத்திலும் ஊடகங்கள் மூலமாகவும் சோமரத்ன திஸாநாயக்கவிடம் மன்னிப்பு கேட்குமாறு நீதிமன்றம் சந்தேக நபருக்கு உத்தரவிட்டுள்ளது.
நற்பெயருக்கு சேதம்
இந்தநிலையில், சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தமது சேவை பெறுநர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் சோமரத்ன திஸாநாயக்கவின் சட்டத்தரணி, தனது சேவைபெறுநரின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டாலும், இழப்பீடு கோராமல் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
