இலங்கை தொடர்பில் மோடியிடம் விஜய் வைத்த பகிரங்க கோரிக்கை
எமது கடற்றொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகின்றனர் எனவே இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு தாருங்கள் அது போதும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இரண்டாவது மாநில மாநாடு
தவெக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில் மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், எல்லாருக்கும் எல்லாமும் என்ற அரசியலை 1967 இல் அண்ணா கொண்டு வந்தார்.
அண்ணா கொண்டு வந்த சமத்துவ அரசியலே திராவிடம். அண்ணாவின் குறிக்கோளில் இருந்து மு.க.ஸ்டாலின் முற்றிலும் விலகிவிட்டார்.
கச்சத்தீவு விவகாரம்
எம்ஜிஆர் உருவாக்கிய கொள்கை, அதை வழிநடத்திய ஜெயலலிதாவின் கொள்கையில் இருந்து தடம் மாறி பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழகத்தில் பாஜக பின்புற வாசல் வழியாக அதிகாரத்தை அடைவதற்கு அதிமுகவின் இன்றைய தலைமை எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கிறது.
அண்ணாவின் கொள்கைகளையும், எம்ஜிஆரின் கொள்கைகளையும் உள்வாங்கி அதை அரசியல் வெற்றியாக மாற்றி 2026இல் மிகப்பெரிய இளைஞர் புரட்சியை உருவாக்கி, விஜய் முதல்வராகி அந்த கொள்கைகளை நிறைவேற்றுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எமது கடற்றொழிலார்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகின்றனர். ஆகையால், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு தாருங்கள் அது போதும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரேயொரு கோரிக்கை விடுத்துள்ளார்.





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
