திடீரென வீட்டை விட்டு வெளியேறிய விஜய்.. எழும் கடும் விமர்சனங்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நீலாங்கரை இல்லத்தில் இருந்து பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
இவ்விடயம் இந்திய அரசியல் பரப்பில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
விஜய், நீலாங்கரை இல்லத்தில் இருந்து வெளியேறிய போது பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

விஜய் கைது செய்யப்படுவாரா! முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த பதில்: மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் பரபரப்பு
விசாரணை நடவடிக்கைகள்
கரூரில் இடம்பெற்ற தவெக பேரணியில் 41 பேர் பலியாகியதுடன் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வீடு மாறியிருப்பது தான் கைது செய்யப்படும் அச்சத்தில் இருக்கலாம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
நீதிமன்றில் இருந்து கைது உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னர் விஜய் இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



