இலங்கை அரசியலில் சூடு பிடிக்கும் விஜய் : நாடாளுமன்றத்தில் கிண்டலாக மாறிய தருணம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரை நட்சத்திரமும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் நாளைய தினம் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசியல் விஜய்யின் வெற்றி குறித்து பல்வேறு வாதங்கள் எழுந்துள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், சிலர் அவரின் அரசியல் செயற்பாடு குறித்து சாடியுள்ளனர்.
பொய்யான வாக்குறுதி
இந்நிலையில் சமகால அநுர அரசாங்கம் போன்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி விஜய் ஆட்சிக்கு வந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நகைச்சுவாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சொந்தமாக கச்சைதீவை மீட்கப் போவதாக பொய்யான வாக்குறுதியை வழங்கி, தமிழக மக்களின் வாக்குகளை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது சமார சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.
கச்சைத்தீவு
நாளை அல்லது நாளை மறுதினம் விஜய் கச்சைத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை.

தற்போது விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக தெரிவாகியுள்ளார்.
அந்த அம்மாவின் (இந்திரா காந்தி) புண்ணியத்தில் பெற்றுக் கொண்ட கச்சத்தீவும் தற்போது இல்லாமல் போய்விடுமா என தெரியவில்லை என சாமர சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam