ரணிலுக்கு விக்னேஸ்வரன் காட்டமான மடல்: அதிருப்தியின் உச்சத்தில் அவர்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe C. V. Vigneswaran Srilankan Tamil News
By Rakesh Oct 11, 2023 06:07 AM GMT
Report

 தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி, காலத்தை இழுத்தடித்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சீற்றத்தின் உச்சிக்கு சென்றுள்ளார்.

இவ்விடயங்களில் தமது அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில், காட்டமான வாசகங்கள் அடங்கிய - தனிப்பட்ட - கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னர் நேரடியாக அனுப்பி வைத்திருக்கின்றார் என்று நம்பகரமாக அறியவந்தது.

ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல்! போரில் திருப்புமுனை: பயணக்கைதிகளை மீட்க அமெரிக்க சிறப்புப் படை

ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல்! போரில் திருப்புமுனை: பயணக்கைதிகளை மீட்க அமெரிக்க சிறப்புப் படை

அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்ட விடயங்களின் சாராம்சம் இதுதான்:-

உங்களின் அண்மைக்கால வெளிநாட்டு விஜயத்தின் முழு வெற்றியையுமே நீங்கள் ஜேர்மன் ஊடகவியலாளருக்கு அளித்த பேட்டி அப்படியே களங்கப்படுத்தி விட்டது. நீங்கள் கடும் போக்குவாத சிங்கள வாக்காளர்களின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக அப்படிச் செய்திருக்க கூடும்.

விக்னேஸ்வரனுக்கு வாக்கு கொடுத்த ரணில் 

ஆனால், அதனால், எதிர்வரும் தேர்தலில் சிங்களவர்கள் அல்லாதவர்களின் கணிசமான - குறிப்பிடத்தக்களவு - வாக்குகளை நீங்கள் இழப்பீர்கள். சிங்கள வாக்குகள் சிங்கள வேட்பாளர்கள் மத்தியில் பிரிக்கப்படுவனவாகிவிடும்.

ரணிலுக்கு விக்னேஸ்வரன் காட்டமான மடல்: அதிருப்தியின் உச்சத்தில் அவர் | Vigneswaran Who Sent The Letter To Ranil

தமிழர்களோ பொதுவான தமிழ் வேட்பாளர் ஒருவர் குறித்து சிந்திக்கத் தலைப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று சாரப்பட தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நீதியரசர் விக்னேஸ்வரன், உறுதியளித்த பல விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றாதமையையும் கடுமையாகச் சாடி இருக்கின்றார் எனத் தெரிகின்றது.

நீங்கள் வாக்குறுதி அளித்த பல விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை. மாகாண சபைகள் தொடர்பில் கலாநிதி விக்னேஸ்வரனின் கீழான ஆலோசனை சபையை அதிகாரத்துடன் செயல்பட வைக்கும் ஏற்பாடு நடைபெறவில்லை.

ஆளுநர் மாற்றம் நடக்கவில்லை. அதே ஆளுநர் மாறாமல் தொடர்கிறார். வடக்கு மாகாண பிரதம செயலாளரும், மாகாண சுகாதார பணிப்பாளரும் பதவிகளில் தொடர்கின்றனர். எங்கள் ஆதரவாளர்கள் இவற்றால் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த விடயங்களில் எமக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் தாமதமடைவதற்கு யாது காரணம் என நாம் ஐயுறுகின்றோம். உங்களுக்கு தமிழர்களின் ஆதரவும் வாக்கும் தேவையில்லை எனின், நீங்கள் அதனை வெளிப்படையாக எங்களுக்குக் கூறலாம்.

தாயை பார்க்க சென்ற மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி : இளம் பெண் பரிதாபமாக மரணம்

தாயை பார்க்க சென்ற மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி : இளம் பெண் பரிதாபமாக மரணம்

நாங்களும் எங்கள் தரப்பினருக்குத் தொடர்ந்து நம்பிக்கை ஊட்டத் தேவையில்லை என்று சாரப்பட நீதியரசர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதி இருக்கிறார் என்று தெரிகின்றது.

கலாநிதி விக்னேஸ்வரன் தலைமையில் ஓர் ஆலோசனைச் சபையே மாகாண சபை நிர்வாகத்தை ஆளுநருடன் சேர்ந்து முன்னெடுக்கத்தக்க வகையிலான ஓர் ஏற்பாட்டுக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் தரப்புடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கினார் என்று கூறப்படுகின்றது.

அந்த ஆலோசனைச் சபைக்கு அதிகாரம் அளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, அதனை செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து இயக்குவதற்கும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தாராம்.

வடக்கு மாகாண ஆளுநராக 13 ஆவது திருத்த நடைமுறையாக்கம் மற்றும் மாகாண சபை விடயங்களை கையாளக்கூடிய தகுதி உடைய ஒருவரை நியமிக்கவும் ஜனாதிபதி ரணில் நீதியரசர் விக்னேஸ்வரனிடம் உறுதி கூறியிருந்தார் என்று கூறப்படுகிறது.

தமிழ் மொழி நடைமுறைக்காகவே வடக்கு மாகாண சபை உள்ள நிலையில் அதன் பிரதம செயலாளராக, தமிழ் தெரியாத சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலைமையை மாற்றுவதற்கும் - வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் பதவியை மத்திய அரசின் உயர் அதிகாரியே கையாளும் முறைமையை மாற்றவும் - நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் வாக்குக் கொடுத்திருந்தார் எனக் கூறப்படுகின்றது.

அவை தொடர்பில் எந்தவித காத்திரமான நடவடிக்கையும் எடுக்காத ரணில் விக்ரமசிங்க தொடர்பில் நீதியரசர் விக்னேஸ்வரன் கடும் சீற்றம், எரிச்சல் மற்றும் ஏமாற்றத்தில் இருக்கின்றார் எனத் தெரிகின்றது. அதன் விளைவே அவர் தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய கடிதம் என்றும் கூறப்பட்டது. 

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி விபத்தில் பலி

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி விபத்தில் பலி

மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US