சவுதி எண்ணெய் ஆலைகளை இலக்கு வைத்த ஹூதிகள்: விரிவடையும் அமெரிக்க-ஈரான் போர் பதற்றம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போரின் எதிரொலியாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினர், சவூதி அரேபியாவின் செங்கடல் பகுதியில் உள்ள இரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வான்வழித் தாக்குதல்கள்
சவூதியின் ஜிஷான் மற்றும் யான்பு நகரங்களில் உள்ள 'அராம்கோ' நிறுவனத்தின் ஆலைகள் மீது இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஹூதி இராணுவத் செய்தி தொடர்பாளர் யஹ்யா சாரீ அறிவித்துள்ளார்.

அதேவேளையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணைபகுதியில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கா நடத்தி வந்த தொடர் வான்வழித் தாக்குதல்கள் கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே சமரச தூதுவர்கள் மூலமாகப் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடி
இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே நிலவும் கடுமையான கருத்து வேறுபாடுகள் காரணமாக இதில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மோதல்கள் தற்போது பிற பிராந்தியங்களுக்கும் பரவி வருகின்றன.

கஸ்பியன் கடலில் உள்ள ஈரான் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தேப் நீரிணையை ஹூதிகள் முடக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மந்தேப் ஆகிய இரு முக்கியப் பாதைகளும் முடக்கப்பட்டால், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுப் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri