ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகும் கொழும்பின் அவசர கூட்டம்! அம்பலமான திட்டம்..
சுமந்திரன் மற்றும் தமிழரசு கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதை விட, சொந்த அதிகாரத்தைத் தக்கவைக்கும் முனைப்பிலேயே இருப்பதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வின், குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்,
வடக்கு-கிழக்கு சிவில் சமூகங்களையும் பிற தமிழ் தேசியக் கட்சிகளையும் தவிர்த்துவிட்டு, கொழும்பில் மட்டும் அவசரக் கூட்டங்களைக் கூட்டி அரசியல் செய்வது, மக்களின் நலனைப் புறக்கணிக்கும் செயலாகும்.
மாத்தளையில் கண்டெடுக்கப்பட்ட 154 எலும்புக்கூடுகள் தொடர்பான செய்திகள், இனப்பிரச்சனையின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சியாக இருக்கலாம்.
இலங்கை அரசு முன்வைக்கும் 'அனைவரும் இலங்கையர்கள்' என்ற கோட்பாடு, ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளங்களை அழித்துவிடும்.
தற்போதைய அரசியல் தலைவர்கள் மக்களின் துயரங்களையும் இலக்குகளையும் உணர்ந்து நேர்மையாகப் பயணிக்க வேண்டும், இல்லையெனில் இது சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகவே அமையும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri