வெடுக்குநாரிமலை விவகாரம்: மூதூரில் கவனயீர்ப்பு போராட்டம்
சிவராத்திரி தினத்தன்று வவுனியா - வெடுக்குநாறி மலை வழிபாட்டின்போது கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், சிவராத்திரி பூசை வழிபாட்டுக்கு தடை ஏற்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மூதூரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டடுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நேற்று(18) இடம்பெற்றுள்ளது.
மூதூர் பிரதான வீதியிலிருந்து ஆரம்பமான நடைபவணி பிரதேச செயலகம் வரை பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலை செய்யக் கோரிக்கை
கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியதையும் காணக்கூடியதாக இருந்தது.
இதன் பின்னர் மூதூர் பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.அலாவுதீன் அவர்களிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
மேலும், திருகோணமலை மாவட்ட ஒன்றிணைந்த சிவில் அமைப்புக்கள் இணைந்து இப்போராட்டத்தினை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
