முல்லைத்தீவில் தடுத்து நிறுத்தப்பட்ட ரணிலுக்கு ஆதரவான கவனயீர்ப்பு நடவடிக்கை
முல்லைத்தீவில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக இருளிலிருந்து நாட்டை ஒளியேற்றிய தலைவர் எனும் தொனிப் பொருளில் தீப்பந்தம் தாங்கி ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நடைபெற்றவிருந்த வேளையில் தேர்தல் அதிகாரி மற்றும் பொலிஸாரால் கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது நேற்று (06) மாலை 06.30 மணிக்கு முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரை
முல்லைத்தீவு சுற்றுவட்டத்திற்கு அருகில் நடைபெறவிருந்த கவனயீர்ப்புக்கு ஏற்பாடுகள் செய்வதற்காக ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் பரப்புரை அலுவலகத்திற்கு முன்னாள் சுமார் 25 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்றுகூடியிருந்த வேளையில் முல்லைத்தீவு தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் வருகைதந்து கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கவனயீர்ப்பு நடவடிக்கையானது தேர்தல் விதிமுறைக்கு மீறிய செயலெனவும் அவ்வாறு கவனயீர்ப்பு மேற்கொள்ளப்படுமாயின் கைது செய்யப்படுவீர்கள் எனவும் பொலிசாஸால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து கவனயீர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தடுத்து நிறுத்தப்பட்ட கவனயீர்ப்பை தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் பரப்புரை அலுவலகத்துக்கு முன்னாள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |