ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டம்
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய இரகசிய தகவலையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்றில் தகவல் வெளியிட்டுள்ளது.
வாக்குமூலம் பதிவு
அத்துடன் தகவல் கொடுத்தவரிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லுமாறும் சந்தேக நபர்கள் யாரேனும் அடையாளம் காணப்பட்டால் அவர்களைக் கைது செய்யுமாறும் பிரதான நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான மிக இரகசிய அறிக்கை செப்டம்பர் 2ஆம் திகதி நீதிவானிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |