வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட 3 வாகனங்கள் மர்மமான முறையில் தீக்கிரை
பாதுக்க மஹிங்கல பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் மர்மமான முறையில் தீக்கிரையாகியுள்ளன.
வான், கெப் மற்றும் முச்சக்கர வண்டி என்பனவே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.
ஹொரண தீயணைப்பு படையினர் தீயை அணைப்பதற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் வாகனங்கள் மூன்றும் சேதமடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசாரணை
இந்த வீடு அமைந்துள்ள காணிப் பகுதிக்குள் எவரினாலும் சுலபமாக பிரவேசிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
யாரேனும் வாகனங்கள் மீது தீ மூட்டினார்களா அல்லது ஒர் வாகனம் தீப்பற்றிக் கொண்டு ஏனைய வாகனங்களுக்கும் அது பரவியதா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதுக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
