வடக்கு - கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்(video)

Mullaitivu Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lankan Peoples President of Sri lanka
By Keethan Apr 20, 2023 09:22 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (20.04.2023) கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், முல்லைத்தீவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் (20.04.2023)  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் இன்று (20.04.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் “வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்” என்ற பதாகையினை தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.


வலியுறுத்தப்பட்ட விடயம்

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் எனவும், கருத்து சுதந்திரம் பறிபோகும் என்றும், இது முற்றுமுழுதாக வேண்டாம் என்பதையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

- கீத்தன்

திருகோணமலை


மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர சபைக்கு முன்னாள் இன்றைய தினம் (20.04.2023) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தை “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு” எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

வடக்கு - கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்(video) | Vigil Against Anti Terrorism Act In Mullaithivu

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தாதே, மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள், சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டங்களை உருவாக்காதே, அச்சமின்றி வாழவிடுங்கள், இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவிடுங்கள், மக்களை வதைக்கும் சட்டங்களை உருவாக்காதீர்கள் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

- அப்துல்சலாம் யாசீம்

மட்டக்களப்பு

மட்டக்களப்பு - மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் (20.04.2023) கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச கிளை ஏற்பாடு செய்திருந்த இக்கவன ஈர்ப்பு போராட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, மற்றும், உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் இலங்கத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்(video) | Vigil Against Anti Terrorism Act In Mullaithivu

இலங்கை அரசே வரியை அறவிட்டு ஏழை வயிற்றில் அடியாதே, பாழடைந்த வீதியை உடனே திருத்து, அரசே மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்காதே, எமது மண் வளத்தை விற்று வயிறு வளர்க்காதே, படகுப் பாதையில் கட்டணம் அறவிடு செய்வதை உடன் நிறுத்து, உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

- வடிவேலு சக்திவேல்

வவுனியா

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபை எதிர்த்து வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு பெண்களால் வவுனியா பத்தினியார்மகிழங்குளம், முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

வடக்கு - கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்(video) | Vigil Against Anti Terrorism Act In Mullaithivu

இதன்போது 'சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதீர், இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி விடுங்கள், இலங்கை அரசே பயங்கரவாத தனிச்சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்காதே' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டுள்ளது.

- வசந்தரூபன்

மன்னார்

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபை எதிர்த்து மன்னாரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பின் கூட்டின் பிரதிநிதிகளுடன் மன்னார் மாவட்ட பெண்கள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு நிகழ்வை இன்றைய தினம் (20.04.2023) முன்னெடுத்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்(video) | Vigil Against Anti Terrorism Act In Mullaithivu

குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு குறித்த நேரத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக நிறுத்த கோரி குறித்த பெண்கள் அமைப்பினரால் அறிக்கை ஒன்றும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளதையும் குறிப்பிடத்தக்கது.

- லம்பார்ட்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் (20.04.2023) இடம்பெற்றுள்ளது.

வடக்கு - கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்(video) | Vigil Against Anti Terrorism Act In Mullaithivu

இதன்போது, மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஆர்ப்பாட்டகார்களால் நடத்தப்பட்டுள்ளது.

- தம்பித்துரை பிரதீபன்

அம்பாறை

இலங்கையில் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வேண்டாம் என்று கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளது.

அம்பாறை மாவட்டம் மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்தில் இன்றைய தினம் (20.04.2023) இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த கூட்டு முன்னணியின் சுமார் 300 பெண்கள் மும்மொழிகளிலுமான சுலோகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்(video) | Vigil Against Anti Terrorism Act In Mullaithivu

இறுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம் என்ற தலைப்பிலான மகஜரை பகிரங்கமாக வாசித்து கோஷம் எழுப்பி போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் எனவும், கருத்துச் சுதந்திரம் பறிபோகும் என்றும், இது முற்று முழுதாக வேண்டாம் என்பதையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US