கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை! வெளியானது அறிவிப்பு
பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையிலான கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களின் குடியுரிமை மற்றும் இதர சம்பிரதாயங்களை உறுதிப்படுத்தும் செயன்முறை நிறைவடைந்ததும் அவர்களை விரைவாக நாட்டிற்கு மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
